போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போபாலில் நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் முதல்வர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இன்று போபாலின் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும் மேலிட பார்வையாளர்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து மத்தியபிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்திய சட்டமன்றத்திற்கு 3 முறை மோகன் யாதவ் தேர்வானார்.
ஏற்கனவே மத்தியபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகானின் அமைச்சரவையிலும் கல்வித்துறை அமைச்சராகவும் மோகன் யாதவ் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பதவியேற்பு விழா பயற்றிய தகவல்கள் ஓய்ந்தனர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.
The post மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்வு! appeared first on Dinakaran.
