- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- சென்னை
- கோவாய்
- நீல்கிரி
- சென்னை வானிலையியல் ஆய்வுக்கட்டுரையில்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை 47 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்றும், அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 731.9 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1079 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 3% குறைவாக பெய்துள்ளது வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அக்டோபர் 1 முதல் இன்று காலை வரை இயல்பாக 398.3 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில் 385.9 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
