×

நிமிர்ந்த புலவா, வளையாத வணக்கம்: பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பதிவு..!!

சென்னை: நிமிர்ந்த புலவா, வளையாத வணக்கம் என்று பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க செய்தியில்,

ஆண்டாண்டு காலம்
ஆண்டுவந்த சொல்தான்
புதுப்பொருள் புகுத்தினாய்

தமிழின் இதழில்
புல்லாங்குழல் பறித்துப்
போர்ச்சங்கு பொருத்தினாய்

ஆரிய உதட்டில்
திராவிட மீசை தரித்தாய்

தெய்வங்களை மிரட்டிச்
சனாதனப் பழுது பார்த்தாய்

கோள்கள் சூரியக் குடும்பம்
என்று சொல்லப்படுவதுபோல்
கவிஞர்கள் பாரதி குடும்பம்
என்று பட்டயம் செய்தாய்

உனக்கு முன்
உனக்குப் பின் என்று
வரலாற்றை வகிர்ந்தாய்

அதனால்தான்
நீ மகாகவி

நிமிர்ந்த புலவா
வளையாத வணக்கம்

என்று பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post நிமிர்ந்த புலவா, வளையாத வணக்கம்: பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Urithra Pulava ,Vairamuthu ,Twitter ,Bharatiyar ,Chennai ,Bharatiya ,Nimitra Pulava ,Poet Vairamuthu ,
× RELATED “கலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார்” : கவிஞர் வைரமுத்து பதிவு!