×

எண்ணூரில் 2வது நாளாக கடலில் கலக்கப்பட்ட எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் கடலோர காவல் படை தீவிரம்..!!

சென்னை: 2வது நாளாக கடலில் கலக்கப்பட்ட எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் கடலோர காவல் படையினர் மேற்கொள்ள உள்ளனர். மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் எண்ணூர் மற்றும் அதை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் வெள்ளம் காரணமாக எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு மற்றும் குடியிருப்பு பகுதியில் கலந்தது. எண்ணெய் படிவங்களானது எண்ணூர் சுற்றியுள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீரோடு கலந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு இவற்றின் வழியாக எண்ணூர் முகத்துவாரம் வரை கடலில் கலந்தது. எண்ணூரில் இருந்து காசிமேடு வரை 20 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு பரவியது. எண்ணெய் கழிவுகள் பரவியதால் கடலோர காவல் படையினர் உடனடியாக 3 ஹெலிகாப்டர்கள் மூலம் 3 மணி நேரத்திற்கு மேலாக ரசாயன பவுடர்களை தூவி எண்ணெய் கழிவுகளை அகற்றினர். நேற்றைய தினம் செய்த பணியின் காரணமாக கடலில் கலந்திருந்த 10 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டது.

மேலும் இதே போல கொசஸ்தலை ஆற்றிலும் இந்த எண்ணெய் கழிவுகளானது படிமங்களாக கீழே படிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியமும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக எண்ணூரிலிருந்து காசிமேடுவரை எண்ணெய் கழிவுகள் வேறு எந்த பகுதிகளிலிருந்து பரவி இருக்கிறது அதை எவ்வாறு அகற்றுவது என்ற 2ம் கட்ட பணியை கடலோர காவல் படை மேற்கொள்ள உள்ளது.

 

The post எண்ணூரில் 2வது நாளாக கடலில் கலக்கப்பட்ட எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் கடலோர காவல் படை தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Coast Guard ,Ennoor ,Chennai ,Ennore ,Dinakaran ,
× RELATED கடலோர காவல்படையில் திறன் வாய்ந்த...