×

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் நீட்டிப்பு

கேரளா: பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பதில் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் நேரம் நீட்டிக்கப்பட்டது.

The post பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Kerala ,
× RELATED சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு...