×

பெரம்பலூரில் நாளை நடக்கிறது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு

அரியலூர்: அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்துக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ், மிசன் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் தற்காலிக பணியிடத்துக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்துக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.13,240 மட்டுமே வழங்கப்படும். இதற்கு 42 வயதுக்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 மற்றும் அதற்கு இணையான பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் சான்றிதழ் மற்றும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தினை https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை வரும் 14ம்தேதி அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் – 621704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

The post பெரம்பலூரில் நாளை நடக்கிறது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு appeared first on Dinakaran.

Tags : Child Protection Office ,Perambalur ,Ariyalur ,Ariyalur District Child Protection Unit Office ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது