×

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

 

ராசிபுரம், டிச.11: ராசிபுரம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆர்.கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் கோபாலகிருஷ்ணன் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி நடந்ததை தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய், ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், விசாரணை மேற்கொண்ட ராசிபுரம் மகளிர் போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal district ,
× RELATED விவேகானந்தா பாராமெடிக்கல் கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா