×

மழை நீர் வடிய வழியில்லாததால் 200 ஏக்கர் சம்பா அழுகியது: விவசாயிகள் கவலை

முத்துப்பேட்டை: மழை நீர் வடிய வழியில்லாததால் 200 ஏக்கர் சம்பா பயிர்கள் அழுகி விட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கீழவாடியக்காடு கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அப்பகுதி விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணியில் ஈடுபட்டனர். பிபிடி, கோ 51, என்எல்ஆர் ரக நெல் சாகுபடி செய்து இருந்தனர்.

இப்பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையால், சுமார் 200 ஏக்கரில் 90 நாள் சம்பா பயிர்களில் மழை நீர் தேங்கியது. அருகில் ஆறு ஓடுவதாலும், பள்ளமான இடத்தில் வயல் இருப்பதாலும் நீர் வடியவழியில்லை. இதனால் பயிர்கள் அனைத்தும் அழுகி விட்டது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மழை நீர் வடிய வழியில்லாததால் 200 ஏக்கர் சம்பா அழுகியது: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED 4 பிரிவுகளில் வென்று சாதனை திருவாரூர்...