×

சட்டீஸ்கர் மாநிலத்தில் 5 பெண்கள் உட்பட 20 நக்சல்கள் சரண்

சுக்மா: சட்டீஸ்கர் மாநிலத்தில் 5 பெண்கள் உட்பட 20 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்தனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் வசித்துவந்த சிலர், நக்சல் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் தொடர்பில் இருந்தனர். மேலும் சிலர் தங்களை நக்சல் தீவிரவாத இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிலையில் நக்சல் தடுப்பு பிரிவின் தொடர் முயற்சியால், நக்சல் அமைப்பில் இருந்த 5 பெண்கள் உட்பட 20 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர்.

இதுகுறித்து சுக்மா எஸ்பி கிரண் சவான் கூறுகையில், ‘சரணடைந்த 20 பேரும், நக்சல் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டதாகவும், பின்னர் அவர்களின் தீவிரவாத, சட்டவிரோத செயல்களை பார்த்து வெறுப்படைந்ததாகவும் கூறினர். போலீசில் சரணடைந்தவர்களில் மிலிட்டியாவின் நக்சல் துணைத் தளபதி உய்கா லக்மா, தண்டகாரண்ய ஆதிவாசி கிசான் மஸ்தூர் சங்கதன் உள்ளிட்டோர் சரணடைந்தனர். அரசின் விதிமுறைகளின்படி, சரணடைந்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும்’ என்றார்.

The post சட்டீஸ்கர் மாநிலத்தில் 5 பெண்கள் உட்பட 20 நக்சல்கள் சரண் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Dinakaran ,
× RELATED திருமண ஆசைகாட்டி பலாத்காரம் பிரபல நடிகர் கைது