×

திருமண விழாவிற்கு சென்று திரும்பியபோது உத்தரபிரதேசத்தில் 8 பேர் தீயில் கருகி உயிரிழப்பு: காரின் டயர் வெடித்த விபத்தில் சோகம்

பரேலி: உத்தர பிரதேசத்தில் காரின் டயர் வெடித்த விபத்தில், காருக்குள் இருந்த 8 பேரும் தீயில் கருகி பலியாகினர். உத்தரபிரதேச மாநிலம் பரேலி அடுத்த நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்றிரவு பரேலியில் இருந்து பஹேரி நோக்கி சென்று கொண்டிருந்த காரில் 8 பேர் பயணித்தனர். அப்போது திடீரென காரின் டயர் வெடித்தது. எதிரே இருந்த டிவைடரில் கார் மோதி, எதிர் திசையில்வந்த டிப்பர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் இவ்விரு வாகனங்களும் வெடித்து தீப்பற்றியது. இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேரும் தீயில் கருகி பலியாகினர். தகவல் அறிந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர், விபத்து நடந்த இடத்திற்கு வந்து தீயை அணைத்து இரு வாகனங்களையும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பஹேரியில் மொஹல்லா ஜாமில் வசிக்கும் உவைஸின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பரேலியில் இருந்து குடும்பத்தினர் காரில் சென்றனர்.

திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் வீடு திரும்பும் போது, இரவு 11.45 மணியளவில் டபவுரா கிராமம் அருகே காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த 8 பேரும் தீயில் கருகி பலியாகினர். விபத்து குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

The post திருமண விழாவிற்கு சென்று திரும்பியபோது உத்தரபிரதேசத்தில் 8 பேர் தீயில் கருகி உயிரிழப்பு: காரின் டயர் வெடித்த விபத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Bareilly ,Dinakaran ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச்...