×

அமைச்சர், எம்எல்ஏக்களுக்கு புதிய கார் கிடையாது: மிசோரம் முதல்வர் அதிரடி

ஐஸ்வால்: புதியதாக பதவியேற்ற அமைச்சர், எம்எல்ஏக்களுக்கு புதிய கார் கிடையாது என்று அம்மாநில முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த மிசோரம் சட்டப் பேரவை ேதர்தலில் எதிர்கட்சியாக இருந்த லால் துஹோமா கட்சியானது ஆட்சியை பிடித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் லால் துஹோமா முதல்வராக பதவியேற்றார். தற்போது அவர் அளித்த பேட்டியில், ‘மிசோரம் மாநிலத்தின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்காக புதிய கார்களை வாங்க மாட்டோம். ஒவ்வொரு முறையும் புதிய அரசு பதவியேற்கும் போதும், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்காக புதிய கார்களை வாங்குவது நடைமுறையாக உள்ளது.

இவ்விசயத்தில் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது. சமீபத்தில் பதவியை இழந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பயன்படுத்திய அரசு வாகனங்களையே புதிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.

The post அமைச்சர், எம்எல்ஏக்களுக்கு புதிய கார் கிடையாது: மிசோரம் முதல்வர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Chief Action ,Aiswal ,Mizoram Chief Action ,Dinakaran ,
× RELATED மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மிசோரம் முதல்வர் எதிர்ப்பு