×

தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று தொடங்கியது. தமிழ்நாடு காவல்துறையில், ஆயுதப்படை மற்றும்‌ சிறப்புக்‌ காவல்படை, 2ம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சீறுடை பணியாளர் தேர்வானையம் அறிவித்தது. இந்த நிலையில், இந்த காலி பணியிடங்களுக்கான தேர்வு இன்று தொடங்கியது . தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எழுதுகின்றனர்.

இரண்டாம் நிலைக் காவலர் ஆயுதப்படையில் 780 பெண்கள், இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 1,819 ஆண்கள் சிறை மற்றும் சீர்திருத்தத்துறையில் இரண்டாம் நிலைக் காவலர் 86 பதவி ஆண்கள் – 83, பெண்கள் – 3, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் 674- ஆண்கள் ஆகிய பதவிகளுக்கு இன்று எழுத்து தேர்வு தொடங்கியது.

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சென்னையில் 10 மையங்களில் இன்று தேர்வு நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 12,000க்கு மேற்பட்டோர் இத்தேர்வை எழுதவுள்ளனர். ஸ்மார்ட் வாட்ச், செல்போன், ஸ்மார்ட் பேண்ட், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களை தேர்வு எழுதும் அறைக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40% அல்லது 32 மதிப்பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது. இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.

The post தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Police ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு எதிரொலியாக...