×

விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து

 

விருதுநகர், டிச. 10: விருதுநகர்-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த பயிற்சி மருத்துவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கேரளா மாநிலம் காவநாத் மாவட்டம், கேரா நகரைச் சேர்ந்தவர் சாமுவேல்ஜோஸ் (21). இவர், புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லுரியில் எம்.பி.பி.எஸ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அவர் காரில், திருவனந்தபுரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விருதுநகர் வடமலைக்குறிச்சி சந்திப்பு அருகே வந்தபோது, காரின் டயர் திடீரென பஞ்சர் ஆகியதாக கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தது. இதனால், நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இதில் சாமுவேல்ஜோஸ் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி தப்பினார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களுடன் இணைந்து சேதமான காரை அப்புறப்படுத்தினர்.

 

The post விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar-Madurai ,Dinakaran ,
× RELATED விருதுநகரில் பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழப்பு