×

கனமழை, ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு சதுரகிரி செல்ல 4 நாட்களுக்கு தடை

வத்திராயிருப்பு: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சதுரகிரி செல்ல 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 13ம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதன் காரணமாகவும், சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இன்று முதல் 13ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post கனமழை, ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு சதுரகிரி செல்ல 4 நாட்களுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Chaduragiri ,Vathirairupu ,Western Highlands ,Chhaturagiri ,Dinakaran ,
× RELATED தை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு...