×

லாரியில் சிக்கி திருநங்கைகள் 2 பேர் பலி

திருவெறும்பூர்: திருச்சி உக்கடை அரியமங்கலத்தை சேர்ந்த திருநங்கைகள் தனியா (25), தமிழ் (29). இவர்கள் இருவரும் டூவீலரில் திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற டிப்பர் லாரியை முந்த முயன்றனர்.

அப்போது நிலை தடுமாறிய டூவீலர் லாரி மீது மோதியது. இதில் கீழே விழுந்த 2 பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கினர். இதில் தன்யா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தமிழை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தார்.

 

The post லாரியில் சிக்கி திருநங்கைகள் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvarumpur ,Trichy Ukkada Ariyamangala ,Taniya ,Trichy Ariyamangalam ,Duweiler ,
× RELATED வீட்டின் மேற்கூரை இடிந்து...