×

கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் தரிசன நேரத்தை அதிகரிக்க ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் தரிசன நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று முன்தினமும், நேற்றும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த வாரமும் இதே நிலை இருந்தபோது பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் மற்றும் டிஜிபிக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் இந்த வாரமும் பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து நேற்று கேரள உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இது குறித்து விசாரணை நடத்தியது. அப்போது சபரிமலையில் தரிசன நேரத்தை அதிகரிப்பது குறித்து தந்திரியுடன் ஆலோசித்து உடனடியாக முடிவை தெரிவிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உத்தரவிடப்பட்டது. பக்தர்கள் ஓய்வெடுக்க வரிசை வளாகம்: சபரிமைலயில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், திருப்பதியை போல் சபரிமலையில் 6 இடங்களில் வரிசை வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பக்தர்கள் ஓய்வு எடுக்க தனித்தனி அறைகளும், கழிப்பறை, சிற்றுண்டி வசதியும் செய்யப்பட்டுள்ளது. தரிசன நேரம் தெரிவதற்காக டிஜிட்டல் போர்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன

The post கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் தரிசன நேரத்தை அதிகரிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Kerala ,
× RELATED கொல்லம் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை