×

கனமழை காரணமாக நெல்லை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று (டிச.09) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நெல்லை: கனமழை காரணமாக நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிச.09) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கத்தின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சிபிஎஸ்சி என அனைத்தும் இன்று இயங்காது. திங்களன்று அரையாண்டு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக நெல்லை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று (டிச.09) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Paddy ,Paddy District Schools ,Mikjam, Chennai ,Dinakaran ,
× RELATED சம்பா, தாளடி பருவத்தில் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்