×

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு காங். எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம்

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுகுறித்து, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கின்றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஒரு மாத ஊதியம்: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று தனது டிவிட்டர் பதிவில், கூறியிருப்பதாவது: ‘மிக்ஜாம் புயல் நிவாரணத்திற்கு நானும், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப.அப்துல் சமதும் தமிழ்நாடு அரசு நிவாரண நிதிக்கு எங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைமை செயலக பணியாளர்கள்: மிக்ஜாம் நிவாரண நிதிக்காக தலைமை செயலக பணியாளர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்குகிறார்கள் என்்று தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன் மற்றும் இணை செயலாளர் லெனின் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

The post முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு காங். எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Chennai ,Cyclone Migjam ,Dinakaran ,
× RELATED தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை...