×

அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பில் சென்னை மக்களுக்கு வழங்க ரூ.2.20 லட்சம் பொருட்கள்

 

அறந்தாங்கி,டிச.9: சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு மிக்ஜாம் புயல் காரணமாக மழை பெய்து மழை தண்ணீர் தேங்கியதால் சென்னை மக்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர்.இந்நிலையில் சென்னையில் உள்ள மக்களுக்கு அனைவரும் தாராளமாக உதவி செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.இதையடுத்து அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிளான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் வர்த்தக சங்கம் தலைவர் காமராஜ் தலைமையில் அறந்தாங்கி பகுதியில் உள்ள வர்த்தகர்களிடம் பெறப்பட்ட அரிசி, மளிகை பொருட்கள், பிஸ்கட், மருந்து உள்ளிட்ட 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான பொருள்அனைத்தையும் லாரியில் ஏற்றி அறந்தாங்கி வட்டாட்சியர் ஜபருல்லாவிடம் வழங்கினர். உரிய முறையில் மாவட்ட கலெக்டரின் மூலம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார். நிகழ்ச்சியில் வர்த்தக சங்க நிர்வாகிகள் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

The post அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பில் சென்னை மக்களுக்கு வழங்க ரூ.2.20 லட்சம் பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Aranthangi Trade Association ,Arantangi ,Arantangi Trade Association ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி