×

குறைகளை சொல்ல இது நேரமில்லை களத்தில் மக்களுக்கு உதவ வேண்டும்: கமல்ஹாசன் கருத்து

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பொருட்களை மநீம தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திலிருந்து வாகனங்களில் நேற்று அனுப்பி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர். குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை. வல்லுநர்களுடன் அமர்ந்து இதுபோன்ற பேரிடர்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான தீர்வுகளை நாம் ஆராய வேண்டும். இது காலநிலை மாறுபாடு என்று உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வு. எனவே குறை சொல்லும் படலத்தை பிற்பாடு வைத்துக் கொண்டு, மக்களுக்கு உடனே செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

The post குறைகளை சொல்ல இது நேரமில்லை களத்தில் மக்களுக்கு உதவ வேண்டும்: கமல்ஹாசன் கருத்து appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,CHENNAI ,Mikjam ,People's Justice Center ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள்...