×

அதிமுக பொதுக்குழு விவகாரம் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பி.எஸ்சின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை ஜனவரி 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை உயர் நீதிமன்றம், ‘‘இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உட்பட நான்கு பேர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது நீதிபதிகள் சஞ்சீவ் கண்னா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விரிவாக விசாரிக்க ஜனவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதன் போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், அதுவரை இடைக்காலமாக ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து உத்தரவிட்டனர்.

The post அதிமுக பொதுக்குழு விவகாரம் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Panneer Selvam ,Supreme Court ,New Delhi ,OPS ,Dinakaran ,
× RELATED பாஜகவுக்கு ஆதரவு என்பதில்...