×

நிவாரண பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்ப ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைப்பு!!

சென்னை : நிவாரண பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்ப ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க பல தொண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 73977 66651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நிவாரண பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்ப ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைப்பு!! appeared first on Dinakaran.

Tags : IAS ,Chennai ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...