×

மின் சிக்கனம் குறித்து நடந்த போட்டிகள் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

அறந்தாங்கி,டிச.8: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் மின்னாற்றல், மின் சிக்கனம், மின் பாதுகாப்பு, சார்பில் பள்ளிகளில் செயல்படும் ஆற்றல் மன்ற போட்டியில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் நிஜந்தன் ஓவியப்போட்டியில் முதல் இடமும், 8ம் வகுப்பு மாணவர் காளீஸ்வரன் இரண்டாம் இடமும், 8ம் வகுப்பு மாணவர் நித்திஸ் மூன்றாம் இடமும் பெற்றனர்.

கட்டுரை போட்டியில் 9ம் வகுப்பு மாணவர் முத்துராமன் முதல் இடமும் 10ம் வகுப்பு மாணவர் வினோத் இரண்டாம் இடமும், 8ம் வகுப்பு மாணவர் ஜனா மூன்றாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆற்றல் மன்ற செயலாளர் அரசக்குமார் பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்களும், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கவிதா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

The post மின் சிக்கனம் குறித்து நடந்த போட்டிகள் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Tamil Nadu ,Science Movement ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு...