×

அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், டிச.8: அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் (பொ) மருத்துவர் கலைவாணி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம், நாளை ( டிச.9) அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துகின்றனர். இக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், அக்கூட்டம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட அரியலூர் வட்டம் ஒட்டக்கோவில் கிராமத்திற்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அரியலூர், உடையார்பாளையம் வட்டம், தா.பழூர் கிராமத்திற்கு தனித் துணை ஆட்சியர், சமூகப் பாதுகாப்புத் திட்டம் அரியலூர், செந்துறை வட்டம், செந்துறை கிராமத்திற்கு துணை பதிவாளர்(பொ.வி.தி) அரியலூர், ஆண்டிமடம் வட்டம், திருக்களப்பூர் கிராமத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அரியலூர், ஆகியோர் மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, இக்கூட்டத்தில், பொதுமக்கள் நியாயவிலைக் கடைகள் தொடர்பாக குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் (பொ) மருத்துவர் கலைவாணி தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur District ,Ariyalur ,Distribution ,Consumer ,P ,Doctor ,Kalaivani ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி