×

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 17 பேரை உடனடியாக மீட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைத்தள பதிவு:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களும் 3 விடைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 17 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் உடனடியாக மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவற்றுக்கு தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால், உடனடியாக அதை விசாரணைக்கு கொண்டு வரவும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை பெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

The post இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 17 பேரை உடனடியாக மீட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Sri Lankan Navy ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Ramadas ,Kottapatnam ,Pudukottai district ,Rameswaram ,Sri Lanka Navy ,Dinakaran ,
× RELATED மீனவர்களுக்கு சிறை.. கச்சத்தீவு...