×

வேலூரில் இருந்து சென்னைக்கு 1.25 லட்சம் லிட்டர் ஆவின் பால் வந்தது

வேலூர்: மிக்ஜாம் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை மீண்டும் வரும் நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து ஆவின் பால் வரவழைக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் ஆவினில் இருந்து கடந்த 5ம் தேதி 35 ஆயிரம் லிட்டரும் 6, 7ம் தேதிகளில் 70 ஆயிரம் லிட்டரும் நேற்று 20 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 4 நாட்களில் 1.25 லட்சம் லிட்டர் பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று வரை பால் பாக்கெட்டுகள் அனுப்பப்பட உள்ளது.

The post வேலூரில் இருந்து சென்னைக்கு 1.25 லட்சம் லிட்டர் ஆவின் பால் வந்தது appeared first on Dinakaran.

Tags : Avin ,Vellore ,Chennai ,Mikjam ,Avin Pal ,Dinakaran ,
× RELATED இன்று முதல் அமலுக்கு வருகிறது ஆவின்...