×

புயல் நிவாரணம் சென்னிமலை பெட்ஷீட்டுக்கு ஆர்டர்கள் குவிகிறது

ஈரோடு: மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, தன்னார்வ அமைப்புகளும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில், புயல் நிவாரணத்திற்கு வழங்குவதற்காக பெட்ஷீட் உற்பத்திக்கு பெயர் பெற்ற சென்னிமலை பெட்ஷீட்களுக்கான ஆர்டர்கள் கடந்த 2 நாட்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதேபோல், லுங்கி, துண்டு, சேலை, பனியன்கள், நைட்டி உள்ளிட்டவைகளுக்கான ஆர்டர்கள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வரத்தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

The post புயல் நிவாரணம் சென்னிமலை பெட்ஷீட்டுக்கு ஆர்டர்கள் குவிகிறது appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamilnadu government ,Chennai ,Cyclone Mikjam ,
× RELATED ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்