×

திருச்சுழியில் கடத்திய 279 மதுபாட்டில் பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

 

திருச்சுழி, டிச.8: திருச்சுழி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்த மூவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.திருச்சுழி எஸ்ஐ வீரணன் தலைமையிலான போலீசார் சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். திருச்சுழியிலிருந்து அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்ப்பாடி விலக்கு பகுதியில் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த மேலகண்டமங்கலம் பகுதியை சேர்ந்த மருதுபாண்டி(31) என்பவரை சோதனை செய்தனர்.

அவரிடம் இருந்த சுமார் 68 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே போன்று மூலக்கரைப்பட்டி விலக்கு பகுதியில் போலீசாரின் வாகன சோதனையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த புதுப்பட்டியை சுப்புராஜ்(54) என்பவரிடம் 162 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சுழி – காரியாபட்டி சாலையில் உள்ள மூலக்கரைப்பட்டி விலக்கில் போலீசாரின் வாகன சோதனையின் போது அப்பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னபாண்டி (58) என்பவரை சோதனை மேற்கொண்டவர்.

அவரிடம் சட்ட விரோத விற்பனைக்காக இருந்த சுமார் 49 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மருதுபாண்டி, சுப்புராஜ் மற்றும் சின்னப்பாண்டி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்த திருச்சுழி போலீசார் மூவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விற்பனைக்காக மூவரும் வைத்திருந்த சுமார் 279 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

The post திருச்சுழியில் கடத்திய 279 மதுபாட்டில் பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி