×

9 எம்பிக்களின் ராஜினாமா ஏற்பு

புதுடெல்லி: மக்களவை எம்பிக்கள் 9 பேரின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று ஏற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக வெற்றி பெற்ற 9 மக்களவை எம்பிக்கள் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரஹலாத் படேல் உட்பட 9 பேரின் ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொள்வதாக நேற்று அறிவித்தார்.

The post 9 எம்பிக்களின் ராஜினாமா ஏற்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Speaker ,Om Birla ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED ஸ்டேபிள் பருத்தி இறக்குமதி வரி முழு விலக்கு: ஒன்றிய அரசு அறிவிப்பு