×

டிசம்பர் 3வது வாரம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

புதுடெல்லி: டிசம்பர் 3வது வாரம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைதான் முக்கிய பொருளாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பா.ஜவை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட்கள் உள்பட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியினர் இதுவரை 4 முறை கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

கடைசியாக நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு டெல்லியில் உள்ள கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் 17 கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை.

இதே போல் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவும் பங்கேற்கவில்லை. அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. 17 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் டிசம்பர் 3வது வாரம் மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதில் அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.

இந்தியா கூட்டணியில் உள்ள 26 கட்சிகளின் தலைவர்களிடம் கூட்டம் நடத்த வேண்டிய தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. டிச.17 முதல் டிச.20ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் கூட்டம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் டிசம்பர் 3வது வாரம் நடக்க இருக்கும் கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீட்டை நடத்தி முடிப்பதுதான் இந்த கூட்டத்தின் முக்கிய பொருளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கே தலைமையில் நடந்த நாடாளுமன்ற கூட்ட ஆலோசனை கூட்டத்திலும் இந்தியா கூட்டணி கட்சிகள் இதைத்தான் வலியுறுத்தி உள்ளன.

The post டிசம்பர் 3வது வாரம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : India ,Alliance ,NEW DELHI ,India Alliance ,Dinakaran ,
× RELATED பீகாரில் நடந்ததை போன்று உ.பி-யிலும்...