×

ரஷ்யாவில் மார்ச் 17ல் தேர்தல்

மாஸ்கோ: ரஷ்யாவில் மார்ச் 17ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. ரஷ்ய அதிபராக புடின் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அங்கு மார்ச் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 71 வயதான புடின் இதுவரை 4 முறை தொடர்ந்து அதிபர் பதவியில் உள்ளார்.

அவர் 5வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் அடுத்த 2 முறை அதிபர் தேர்தலில் போட்டியிட சட்டத்திருத்தம் பெற்றுள்ளார். இதன் மூலம் 2036 வரை புடின் அதிபராக நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

The post ரஷ்யாவில் மார்ச் 17ல் தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,Putin ,
× RELATED ரஷ்யாவின் தேசிய ஒற்றுமை பாராட்டுக்குரியது: அதிபர் புடின் பெருமிதம்