×

முட்டை விலை 5 ரூபாயானது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 4 நாட்களாக தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 490 காசுகளாக இருந்த முட்டை விலை, நேற்று 10 காசுகளை என்இசிசி உயர்த்தியது. இதனால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 500 காசுகளாக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களாக தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விற்பனை குறைந்து வந்தது. இதனால் முட்டை விலையை என்இசிசி தொடர்ந்து குறைத்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக முட்டை விலை அதிகரித்து வருகிறது. இதனால் கோழிப் பண்னையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post முட்டை விலை 5 ரூபாயானது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் மாட்டிறைச்சி கொண்டு...