×

போதையில் செக்ஸ் டார்ச்சர் கணவனை கொன்ற மனைவி

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கீரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(40). லாரி டிரைவரான இவரது மனைவி கனகா (36). இவர்களுக்கு 8 வயதில் மகனும் 4 வயதில் மகளும் உள்ளனர். கடந்த 1ம் தேதி, வரட்டாறு தடுப்பணை கால்வாயில் மர்மமான முறையில் ராஜா இறந்து கிடந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் உடலை மீட்டு, போலீசாருக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்து விட்டனர். ராஜ தாயார் அளித்த புகாரின்பேரில், அவரது உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ராஜா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மர்ம மரணத்தை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். இந்நிலையில், ராஜாபின் மனைவி கனகா கீரைப்பட்டி விஏஓவிடம் நேற்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திடுக் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தினமும் குடித்துவிட்டு வரும் ராஜா தூங்க விடாமல் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். சம்பத்தன்று போதையில் வந்த ராஜா வலுக்கட்டாயமாக உறவுக்கு அழைத்து உள்ளார்.

அவர் மறுக்கவே கனகாவின் கழுத்தை இறுக்கி கொல்ல முயன்று உள்ளார். இதனால், ராஜாவின் முகத்தில் ஓங்கி கனகா குத்தி உள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். பின்னர் கணவன் உடலை தரதரவென இழுத்துச் சென்று வீட்டிலிருந்து 30 அடி தூரமுள்ள வரட்டாறு தடுப்பணை கால்வாயில் வீசியுள்ளார். ரத்தக்கரை படிந்த கால்மிதியை பாத்ரூமில் போட்டு எரித்துள்ளார். மேலும் ரத்தக்கரையை சுத்தமாக துடைத்துவிட்டார். பிரேத பரிசோதனையில் கொலை என கண்டுபிடிக்கப்பட்டதும் சரணடைந்தார்.

The post போதையில் செக்ஸ் டார்ச்சர் கணவனை கொன்ற மனைவி appeared first on Dinakaran.

Tags : Raja ,Keeraipatti ,Arur ,Dharmapuri district ,Kanaka ,
× RELATED பிரதமர் மோடி ‘வசூல் ராஜா’ போல ED, IT, CBI,...