×

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தெலங்கானா முதலமைச்சராக பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: தெலங்கானா மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரேவந்த் ரெட்டியுடனான தொலைபேசி உரையாடலில், அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன். முதலமைச்சராக அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்திட வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : M. K. Stalin ,Telangana ,Chief Minister ,Revanth Reddy ,Chennai ,Chief Minister of Telangana ,Tamil Nadu ,M.K.Stalin ,
× RELATED கூட்டாட்சி கருத்தியலை உயர்த்தி...