ஊட்டி: ட்டியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர். நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதன் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் எப்போதும் வாகன நெரிசல் காணப்படும். இந்த நிலையில், ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி தெரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் ஊட்டி நகருக்குள் கால்நடைகளை விடக்கூடாது என எச்சரித்தது. இருப்பினும், ஊட்டியில் கால்நடைகள் மற்றும் குதிரைகள் தொல்லை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் இருந்து மருத்துவமனை செல்லும் சாலையில் எப்போதும் குதிரைகள் கூட்டமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குதிரைகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டு வாகனங்கள் மீது மோதுவதால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது.னவே ஊட்டி நகரில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்கவும், அவை நகருக்குள் வராமல் தடுக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post ஊட்டியில் கால்நடைகள் தொல்லை: பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் அவதி appeared first on Dinakaran.
