×

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் நிவாரண பொருட்களை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: தொடரும் மிக்ஜாம் நிவராணப் பணிகள், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனை பகுதிகளில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்றும் வழங்கினார்.

சென்னையில் வரலாறு காணாத கடும் மழையினால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இன்றும் (7.12.2023) நிவாரணப் பொருட்கள், அரிசி, உணவுப் பொட்டலங்கள், குடிதண்ணீர், பால்பொருட்கள், பிஸ்கெட், பழங்கள் போன்றவற்றை வழங்கினார்.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இன்று காலை முதலே நிவராணப் பொருட்களை மிகவும் மும்மரமாக வழங்கினார்கள். கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், தயார் செய்யப்பட்ட 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட உணவு பொட்டலங்கள் மற்றும் இதர நிவாரணப் பொருட்களை சுமார் 15 லாரிகளில் ஏற்றி சென்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கினார்.

நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் அடங்கிய மூன்று ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைத்தும், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனை ஆகிய பகுதிகளில், ஒவ்வொரு பகுதிக்கும், பொறியாளர்கள் அடங்கிய 5 கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, நிவாரணப் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

வேளச்சேரிப் பகுதியில் உள்ள, “ராம் நகர், வி.ஜி.பி. செல்வா நகர், ஏ.ஜி.எஸ். காலனி, நேதாஜி காலனி, ஆண்டாள் நகர்“ ஆகிய நகர்களில் வசிக்கும் மக்களுக்கு, 20,000 குடிநீர் பாட்டில்கள், 5000 பிரட் பாக்கெட்கள், 10,000 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 4000 லிட்டர் பாக்கெட் பால் வழங்கப்பட்டுள்ளது.

மடிப்பாக்கம் பகுதியில் உள்ள, “ராம் நகர் விரிவு, பாலாஜி நகர், கைவேலி, குபேரன் நகர், தந்தை பெரியார் நகர்“ ஆகியப் நகர்களில் வசிக்கும் மக்களுக்கு, 20,000 குடிநீர் பாட்டில்கள், 5000 பிரட் பாக்கெட்கள், 10,000 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 3000 பால்பவுடர் பாக்கெட்டுகள்(1கி), 3000 லிட்டர் பாக்கெட் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏரிக்கரைப் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு, வீட்டிற்கு தேவையான 26 மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கப்பட்டது.

மேலும், பள்ளிக்கரனை பகுதியில் உள்ள “காமகோடி நகர், நாராயணபுரம், சிவன்கோவில், ராஜேஷ் நகர், பாலாஜி நகர்“ ஆகிய நகர்களில் வசிக்கும் மக்களுக்கு, 20,000 குடிநீர் பாட்டில்கள், 6000 பிரட் பாக்கெட்கள், 10000 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 7000 பால்பவுடர் பாக்கெட்டுகள், 4000 லிட்டர் பாக்கெட் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனை போன்ற பகுதிகளில் மொத்தம், 60,000 குடிநீர் பாட்டில்கள், 16,000 பிரட் பாக்கெட்டுகள், 30,000 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 10,000 லிட்டர் பால்பாக்கெட்டுகள் மற்றும் 15 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களும், அலுவலர்களும் உடனிருந்து, நிவாரணப் பொருட்களை வழங்க பேருதவி புரிந்தனர்.

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரனை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் நிவாரண பொருட்களை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Minister A. ,Velu ,Chennai ,Minister ,Department of Public Works ,Small Ports ,Mijam ,Velacheri ,Dilipakkam ,
× RELATED தமிழ்நாட்டில் 117 நகரங்களுக்கு...