×

சென்னையில் நடமாடும் காய்கறி விற்பனை தொடக்கம்… அனைத்து வகை காய்கறிகளும் அரை கிலோ ரூ.20க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் வீடுகளுக்கே வந்து மானிய விலையில் தரும் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் உருக்குலைந்துள்ளன. இந்த நிலையில், மழை பாதித்துள்ள பகுதிகளில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்ததால் போக்குவரத்து பாதித்து காய்கறிகளைக் கொண்டு வரும் லாரிகள் சென்னை நகருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் காய்கறிகள் வரத்து குறைந்ததால் சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் குறைந்த விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தேனாம்பேட்டையில் காய்கறி விற்பனைக்கான 100 வண்டிகளை அமைச்சர் பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். தினமும் 20 மெட்ரிக் டன் காய்கறிகளை வாங்கி விற்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மழை பாதித்த இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் அனைத்து காய்கறிகளும் அரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் நடமாடும் காய்கறி விற்பனை தொடக்கம்… அனைத்து வகை காய்கறிகளும் அரை கிலோ ரூ.20க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...