×

கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு, புதிய அட்டவணையை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான புதிய தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு புதிய அட்டவணை வெளியிட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை வரலாற்றில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கபட்டது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பெய்தது.

மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 4ம் தேதி நடைபெற இருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து மறுதேதி விரையில் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான புதிய தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் தேர்வுகள் டிசம்பர் 11ல் தொடங்கி அடுத்த ஆண்டு 2024 பிப்ரவரி 17ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

The post கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு, புதிய அட்டவணையை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் நாளை விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி..!!