×

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4.12.2023 முதல் 7.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.

புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் நாளை (8.12.2023) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,
× RELATED மார்த்தாண்டத்தில் பரபரப்பு கழிவு...