×

மல்பெரியின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

திபெத் நாட்டிலிருந்து கிமு140இல் மல்பெரி இந்தியாவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. இது ஒரு செடி வகையைச் சேர்ந்தது. கருப்பு, ஊதா, இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பழங்கள் காணப்படுகிறது.மல்பெரியில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் சுவை திராட்சை சுவையை போல் இருக்கும். மல்பெரி சாப்பிடுவதால், இரும்பு சத்து குறைபாடு நீங்கும் மற்றும் உடல் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். இதில் ரைபோ ஃபிளேவின் உள்ளது. அவை திசுக்களை ஃப்ரீ ரேடிக்கல்ஸிடமிருந்து காத்து நம் உடல் முழுவதும் ஆக்சிஜன் நகர துணை புரிகிறது. மல்பெரியில் 88% தண்ணீர்தான் இருக்கிறது. 1 கப் மல்பெரியில் 60 கலோரிகள் மட்டுமே உள்ளன. மல்பெரி பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்:

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகரித்து நம்மை பாதுகாப்பாக வைக்கிறது. மல்பெரி, வைட்டமின் சி சத்துகளை தருகிறது. எனவே இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியின் மூலப் பொருளாக இருக்கிறது.மல்பெரி பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் ஜீரணத்தை எளிமையாக்குகிறது. தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, மல்பெரி மலச்சிக்கல், வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்னைகள் நீங்கும்.

டைப் 2 சர்க்கரை உள்ளவர்களுக்கு சிறந்த பழம். ஏனென்றால் மல்பெரி பழத்தில் compound 1-deoxynojirimycin (DNJ) எனும் வேதிப் பொருள் இருக்கிறது. இது குடலில் மாற்றத்தை ஏற்படுத்தி, கார்போஹைட்ரேட்டுகளை முறித்து விடுகிறது. எனவே உணவு சாப்பிட்ட உடனே ஏற்படும் சர்க்கரை அளவின் ஏற்றத்தை மெதுவாக்கி, மல்பெரி நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது. மல்பெரி வயிற்றில் சர்க்கரை முறிவை மெதுவாக்குகிறது.

அதனால் ரத்தத்திலும் அது மெதுவாக உறிஞ்சப்படுகிறது. எனவே இது உடலில் உள்ள சர்க்கரை அளவை மிக ஆரோக்கியமாக வைக்கிறது.கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் ஒவ்வொரு செல்களிலும் இருக்கும் ஒரு முக்கியமான கொழுப்பு மூலக்கூறு. எனவே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் இதய நோய்கள் தாக்கும் வாய்ப்பும் அதிகமாகி விடுகிறது. மல்பெரி பழம் மற்றும் அதிலிருந்து எடுக்கப்படும் சாறும் நம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு அளவை குறைக்கிறது.

கல்லீரலில் கொழுப்பு தேங்குவதை தடுக்கிறது.மல்பெரியில் ஃபிளேவனாயிட்ஸ், ஆல்கலாயிட்ஸ் மற்றும் ஃபீனாலிக் ஆசிட்ஸ் போன்ற கேன்சரை எதிர்த்து போராடும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. நூறு ஆண்டுகளாக, கேன்சரை எதிர்க்கும் சீனாவின் பாரம்பரிய மருத்துவ தீர்வில் மல்பெரிக்கு முதலிடம் உண்டு.

தொகுப்பு: ரிஷி

The post மல்பெரியின் மருத்துவ குணங்கள்! appeared first on Dinakaran.

Tags : India ,Tibet ,Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED தொகுதி பங்கீடு தொடர்பாக இந்திய...