×

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, பால், மளிகை உள்ளிட்ட பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

சென்னை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப அரிசி பருப்பு, பால், மளிகை உள்ளிட்ட பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “5.12.2023 அன்று வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளை நான் நேரில் சென்று பார்வையிட்டு, கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினேன். தொழிற்பேட்டைகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மின்கட்டண சலுகை அளிக்கவும் வலியுறுத்துகிறேன்.

அரசு உடனடியாக அனைத்து இடங்களுக்கும் மின் இணைப்பை வழங்க வேண்டும். எங்கெங்கு தண்ணீர் தேங்கி உள்ளதோ, அதனை உடனடியாக சிறப்பு முயற்சி எடுத்து மழைநீரை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சாலைகளை உடனடியாக சீரமைக்க வெள்ள நீரை அப்புறப்படுத்தியவுடன், உடனடியாக ப்ளீச்சிங் பவுடர், பினாயில் கொண்டு சுத்தம் செய்து, நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதுடன், 500 வீடுகளுக்கு ஒரு முகாம் என்று சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட கோரிக்கை விடுகிறேன். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தை சீர் செய்யவும், அண்டை மாநிலங்களில் இருந்து பாலை உடனடியாகக் கொள்முதல் செய்து மக்களுக்குத் தங்கு தடையின்றி பால் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் அரிசி, பருப்பு, பால், மளிகைப் பொருட்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்கிட வேண்டும்,”என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, பால், மளிகை உள்ளிட்ட பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Chennai ,
× RELATED சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில்...