×

நட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவஸ்தலங்கள்

1. அசுவினி – ஞானபைரவர், பேரூர்.
2. பரணி – மகாபைரவர், பெரிச்சியூர்.
3. கார்த்திகை – அண்ணாமலை பைரவர், திருவண்ணாமலை.
4. ரோகிணி – பிரம்ம சிரகண்டீஸ்வரர், திருக்கண்டியூர்.
5. மிருகசீரிஷம் – க்ஷேத்திரபாலர், க்ஷேத்ரபாலபுரம்.
6. திருவாதிரை – வடுக பைரவர், வடுகூர்.
7. புனர்பூசம் – விஜய பைரவர், பழனி.
8. பூசம் – ஆஸின பைரவர், வாஞ்சியம்.
9. ஆயில்யம் – பாதாள பைரவர், காளஹஸ்தி.
10. மகம் – நர்த்தன பைரவர், வேலூர்.
11. பூரம் – பைரவர், பட்டீஸ்வரம்.
12. உத்திரம் – ஜடாமண்டல பைரவர், சேரன்மகாதேவி.
13. அஸ்தம் – யோகாசன பைரவர், திருப்பத்தூர்.
14. சித்திரை – சக்கரபைரவர், தர்மபுரி.
15. சுவாதி – ஜடாமுனி பைரவர், பொற்பனைக் கோட்டை.
16. விசாகம் – கோட்டை பைரவர், திருமயம்.
17. அனுஷம் – சொர்ண பைரவர், சிதம்பரம்.
18. கேட்டை – கதாயுத பைரவர், சூரக்குடி.
19. மூலம் – சட்டைநாதர், சீர்காழி.
20. பூராடம் – வீரபைரவர் அவிநாசி, ஒழுகமங்கலம்.
21. உத்திராடம் – முத்தலைவேல், வடுகர், கரூர்.
22. அவிட்டம் – பலிபீடமூர்த்தி, சீர்காழி, ஆறகழூர்.
23. திருவோணம் – மார்த்தாண்ட பைரவர், வயிரவன் பட்டி.
24. சதயம் – சர்ப்ப பைரவர், சங்கரன்கோவில்.
25. பூரட்டாதி – அஷ்டபுஜபைரவர், கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்.
26. உத்திரட்டாதி – வெண்கலஓசை பைரவர், சேஞ்ஞலூர்.
27. ரேவதி – சம்ஹார பைரவர், தாத்தையாங்கார்பேட்டை.

மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள், அந்தந்த பைரவர் ஸ்தலத்திற்கு சென்று, விளக்கேற்றி வழிபட்டுவரவேண்டும். இதனை செய்ய முடியாதவர்கள், அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று, அவரவர் நட்சத்திரதினத்தன்று, பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.

பைரவர் தெய்வீக மூலிகை பொடியை, சிவப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பைரவரிடம் தங்களின் பிரார்த்தனைகளை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

மூல மந்திரம்

ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:

இவைகளை செய்வதன் மூலமாக திருமணத்தடை, கணவன் – மனைவி இடையே உள்ள பிரச்னை, வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்னை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு, வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

தொகுப்பு: அனுஷா

The post நட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவஸ்தலங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?