×

ரேஷன் அரிசியில் கலப்படம்: வட்டாட்சியரிடம் திமுக கவுன்சிலர் மனு


பள்ளிப்பட்டு: கலப்படம் செய்யப்பட்ட ரேஷன் அரிசி வழங்கப்படுவதாக வட்டாட்சியரிடம் திமுக ஒன்றிய கவுன்சிலர் புகார் மனு அளித்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை திமுக ஒன்றிய கவுன்சிலர் பிரமிளா வெங்கடேசன் நேற்று ஆர்.கே.பேட்டை வட்டாட்சி பூந்தமல்லி: மிக்ஜாம் புயலால் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வேலப்பன்சாவடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் தேங்கியிருக்கும் மழைநீரில் மூழ்கியுள்ளன. அந்த பகுதியில் இருந்த மரங்கள் காரின் மீது முறிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன.

இதற்கிடையே மழைநீர் சூழ்ந்த விஜிஎன் நகர் 1, 2, 8 ஆகிய வார்டு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் மூர்த்தி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீட்டு 3 திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். மேலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் சுமார் 8 ஆயிரம் பேருக்கு உணவு, பால், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.40 மின் மோட்டார்கள், 20 டிராக்டர்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நகர்மன்ற தலைவர் மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடியிருப்பு வளாகத்திற்குள் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது குடியிருப்பு வளாகத்தை சுற்றிலும் அதிகளவு மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகி, அத்தியாவசிய தேவைகளுக்காக அல்லல்பட்டு வருகின்றனர். ரேஷன் அரிசியில் கலப்படம் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருவதால், உரிய விசாரணை மேற்கொண்டு தரமான ரேஷன் அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மனுவில் அவர் கேட்டுக்கொண்டார்.

The post ரேஷன் அரிசியில் கலப்படம்: வட்டாட்சியரிடம் திமுக கவுன்சிலர் மனு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur District ,Dimuka ,Vattadshiar ,
× RELATED தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின்...