×

13 வயதிற்கு முன் மாதவிடாய் துவக்கம் பெண்களுக்கு உடல் பருமன், பக்கவாதம் வரும் ஆபத்து

புதுடெல்லி: 13 வயதிற்கு முன் முதல் மாதவிடாய் சுழற்சி ஏற்பட தொடங்குவது நடுத்தர வயதில் டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும் அபாயத்துடன் தொடர்புள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிர்காம் மகளிர் மருத்துவமனை மற்றும் டுலேன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் 13வயதுக்கு முன் பருவமெய்துபவர்கள் அதாவது முதல் மாதவிடாய் சுழற்சி தொடங்குபவர்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 20 வயது முதல் 65 வயது வரையுள்ள சுமார் 17ஆயிரம் பெண்களின் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வன் முடிவில் 13வயதுக்கு முன்னரே முதல் மாதவிடாய் சுழற்சி தொடங்குபவர்களுக்கு குறிப்பாக 10 வயதுக்கு முன்பாக முதல் மாதவிடாய் சுழற்சி ஏற்பட தொடங்குபவர்களுக்கு 65வயதுக்கு முன்னர் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு டைப் 2 வகை நீரிழிவு நோய் தாக்கும் அபாயமும் நிலவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1999ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான தேசிய அளவிலான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு கணக்கெடுப்பில் இருந்து வந்த பெண்களின் தரவுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பில் பெண்கள் எப்போது முதல் மாதவிடாய் சுழற்சியை எதிர்கொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

The post 13 வயதிற்கு முன் மாதவிடாய் துவக்கம் பெண்களுக்கு உடல் பருமன், பக்கவாதம் வரும் ஆபத்து appeared first on Dinakaran.

Tags : New Delhi ,
× RELATED ஜாதி, மத அடிப்படையில் கைதிகளை பிரிக்க...