×

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன்: காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடி: காரைக்குடியில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த விவகாரத்தில், இஸ்டாகிராமில் பழகி நண்பர்களுக்கு சிறுமியை காதலன் விருந்தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். 3 பேரை தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் சூர்யா (21). காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்துள்ளார். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன் காதலன் சூர்யாவை சந்திக்க காரைக்குடி புதிய அரசு மருத்துவமனை அருகே சிறுமி சென்றுள்ளார்.

அங்கு வந்த சூர்யா, சிறுமியை அழைத்து கொண்டு, அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள காட்டு பகுதிக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் தனது நண்பர்கள் 4 பேரை வரவழைத்து, சிறுமியை கட்டாயப்படுத்தி, அவர்களுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். அன்றிரவு முழுவதும் வீட்டுக்கு செல்லாமல் இருந்த சிறுமி, பெற்றோருக்கு பயந்து, வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பெற்றோர் தேடுவதை அறிந்த உறவினர், சிறுமியை காரைக்குடிக்கு அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து சிறுமி, தனது தாயாரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சூர்யாவால் தனக்கு நேர்ந்த துயரங்களை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில், நேற்று காலை சூர்யா, அவரது நண்பர் நிஷாந்த் ஆகியோர் சிறுமியை தேடி, அவரது வீட்டுக்கு சென்றனர். அவர்களை சிறுமியின் உறவினர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது, சிறுமியின் உறவினர்கள் தாக்கியதாக போலீசில் சூர்யா, நிஷாந்த் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இருவரையும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து இருவரும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், சூர்யா, நிஷாந்த் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சூர்யா, நிஷாந் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து ஏ.எஸ்.பி ஸ்டாலின் கூறுகையில், ‘சிறுமி கூட்டு பலாத்காரம் தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளோம். 3 பேரை இன்றைக்குள் கைது செய்துவிடுவோம்’ என்றார்.

 

The post இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன்: காரைக்குடியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,
× RELATED போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம்...