×

பால், குடிநீரை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சிவ்தாஸ் மீனா!

சென்னை: பால், குடிநீரை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரித்துள்ளார். அடையார் ஆற்றில் 37,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. துப்புரவு பணிகளில் பிற மாவட்டங்களில் இருந்து வந்த பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் 4% பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படவில்லை;அடையாற்றில் 37,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படாமல் உள்ளது. உயிரிழப்புகளை தடுக்கவே மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குடிநீர் விநியோகம் செய்பவர்கள் பதுக்கி வைக்கவோ, அதிக விலைக்கு விற்கவோ கூடாது. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post பால், குடிநீரை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சிவ்தாஸ் மீனா! appeared first on Dinakaran.

Tags : Shivtas Meena ,Chennai ,Chief Secretary ,Shivdas Meena ,Dinakaran ,
× RELATED சென்னை ஆலந்தூர் மண்டலத்தில்...