×

இந்தோனேசியாவின் சுமத்ராவில் எரிமலை வெடித்து 11 பேர் உயிரிழப்பு; 12 பேர் மாயம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ராவில் எரிமலை வெடித்து சிதறியதில் 11 பேர் பலியாகினர். 12 பேர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் 2,891 மீட்டர் உயரமுள்ள மராபி மலை வெடித்தது. அப்போது அப்பகுதியில் 75 பேர் இருந்தனர். 49 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மலையில் இருந்து கசிந்த எரிமலை மற்றும் சாம்பல் 3 கி.மீ உயரத்திற்கு உயர்ந்து பொங்கியது. சாலைகள் மற்றும் வாகனங்கள் சாம்பலால் மூடப்பட்டன.

பாதுகாப்பு காரணங்களுக்காக மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. சுமத்ரா தீவில் உள்ள எரிமலைகளில் மராபியும் ஒன்றாகும். மராபி பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பு விபத்தில் 11 மலை ஏறுபவர்கள் பலியாகினர். 12 பேர் மாயமாகினர். பாதுகாப்பு காரணங்களுக்காக தேடுதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த 1979ல், மராபியில் நடந்த எரிமலை வெடிப்பு விபத்தில் 60 பேர் பலியாகினர் என்பது குறிப்படத்தக்கது.

The post இந்தோனேசியாவின் சுமத்ராவில் எரிமலை வெடித்து 11 பேர் உயிரிழப்பு; 12 பேர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Sumatra, Indonesia ,Jakarta ,Indonesia ,Dinakaran ,
× RELATED டிரம்ப் தாக்குதல் நடத்தினால்...