×

ஓய்வின்றி உழைக்கும் அனைத்து நிர்வாக அதிகாரிகளுக்கும் நன்றி; வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால் மீட்பு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையில் தனது வீட்டிற்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்துவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இது மட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளன. அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மிக்ஜாம் புயல் நெல்லூருக்கும் மச்சிலிபட்டணத்திற்கும் இடையே, பாபட்லாவிற்கு அருகே, இன்று கரையை கடந்தது.

இந்த நிலையில் தனது வீட்டிற்கு உள்ளேயும் மழை வெள்ளம் புகுந்துவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, “எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காரப்பாக்கத்தில் தண்ணீர் மட்டம் மிக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவிக்கு அழைத்து உள்ளேன். மின்சாரம் இல்லை. வைஃபை இல்லை. செல்போன் சிக்னல் இல்லை எதுவுமே இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்கு இருக்கும் பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். சென்னை முழுவதும் வாழும் மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு அதிகளவில் பகிரப்பட்டது. ஊடகங்களிலும் செய்தியாக வந்தது. இதனை அடுத்து மீட்புப் படையினர் அவரது வீட்டுக்கு சென்று பைபர் அவரையும் மற்றவர்களையும் மீட்டு வந்தனர். இதனை ட்விட்டரில் பதிவிட்டு விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்து உள்ளார். “என்னை போன்ற மக்களுக்கு உதவி தீயணைப்பு படையினருக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்புப் பணிகள் தொடங்கிவிட்டன. 3 படகுகள் இயக்கப்படுகின்றன. இதுபோன்ற சோதனை காலங்களில் தமிழ்நாடு அரசின் சிறப்பான பணி. ஓய்வின்றி உழைக்கும் அனைத்தும் நிர்வாக அதிகாரிகளுக்கும் நன்றி.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

The post ஓய்வின்றி உழைக்கும் அனைத்து நிர்வாக அதிகாரிகளுக்கும் நன்றி; வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Vishnu Vishal ,Chennai ,Vishnu Vishal X ,Dinakaran ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...