×

வடகிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் அடுத்த 4 மணி நேரத்தில் கரையை கடக்கும் என தகவல்

ஆந்திரா: ஆந்திர மாநிலம் காவாலிக்கு வடகிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல்
நிலைகொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாப்பட்லாவுக்கு அருகே தெற்கு ஆந்திர கடற்கரையை அடுத்த 4 மணி நேரத்தில் தீவிர புயலாக கடக்க உள்ளது. புயல் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் மையம் கொண்டு தமிழ்நாட்டில் வரலாறு காணாத பெருமழையை கொட்டிய மிக்ஜாம் புயல், ஆந்திராவின் நெல்லூர்- மச்சிலிபட்டணம் (மசூலிப்பட்டினம்) இடையே பாபட்லாவில் கரையை கடக்கத் தொடங்கியது. மிக்ஜாம் புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் பயங்கரமான சூறவாவளி பேய் காற்று புரட்டிப் போட்டு வருகிறது.

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவமாடிவிட்டது. சென்னைக்கு மிக அருகே 30 மணி நேரம் நிலை கொண்டு நின்றது மிக்ஜாம் புயல். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்தது. 30 மணிநேரத்தில் 40 செ.மீ-க்கும் அதிகமான மழை வெளுத்தெடுத்தது. இதனால் சென்னை மாநகரும் புறநகர் பகுதிகளும் வெள்ளத்தால் தத்தளித்தன. வங்க கடல் கடும் சீற்றமாக இருந்தால் வெள்ளநீரும் கடலுக்குள் உள்ளே புக முடியவில்லை. இதனால் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் ஒட்டுமொத்தமாக பெரும் தத்தளிப்பும் பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் காவாலிக்கு வடகிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைகொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாப்பட்லாவுக்கு அருகே தெற்கு ஆந்திர கடற்கரையை அடுத்த 4 மணி நேரத்தில் தீவிர புயலாக கடக்க உள்ளது.

The post வடகிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் அடுத்த 4 மணி நேரத்தில் கரையை கடக்கும் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Andhra ,AP ,Khawali ,Dinakaran ,
× RELATED ஆந்திராவில் நெற்பயிர்களை...