×

சென்னையில் இருந்து விலகிச் சென்ற மிக்ஜாம் புயல்: மசூலிப்பட்டினத்தை நெருங்குகிறது: வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: சென்னையில் இருந்து வடக்கே 200 கி.மீ. தொலைவுக்கு மிக்ஜாம் புயல் விலகிச் சென்றது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் திங்கள்கிழமை முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது. நேற்று பிற்பகல்வரை சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவு வரை நெருங்கி வந்த நிலையில், ஆந்திரக் கரையை நோக்கி சென்னைக்கு வடக்கே நெல்லூருக்கு தென்கிழக்கே மாலை நகரத் தொடங்கியது.

தற்போது மணிக்கு 7 கி.மீ தொலைவில் நகரும் மிக்ஜாம் புயல் நெல்லூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்று பகல் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே பபட்லா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீவிர புயலாக கரையை கடக்க உள்ளதால் அப்போது 100 கி.மீ.க்கு மேல் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் விலகிச் சென்ற நிலையில் சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது. பல இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது; பேருந்து போக்குவரத்து சீரடைகிறது.

The post சென்னையில் இருந்து விலகிச் சென்ற மிக்ஜாம் புயல்: மசூலிப்பட்டினத்தை நெருங்குகிறது: வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட் appeared first on Dinakaran.

Tags : Masulipatnam ,Weather Center ,Chennai ,Mikjam ,Southwest Bank ,Weather Centre ,Dinakaran ,
× RELATED அனலாக தொடங்கும் கோடை காலம்: வானிலை மையம் எச்சரிக்கை